மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :
இந்தியாவின் முன்னணி பர்னிச்சர் பிராண்டான ராயல்ஓக் (Royaloak) மதுரையில் இன்று தனது முதல் ஸ்டோரை தொடங்கியுள்ளது. ராயல்ஓக் அதன் சர்வதேச அளவிலான சோஃபாக்கள், சாப்பாடு மேசைகள், மெத்தை, படுக்கைகள், அலங்காரம் மற்றும் பரந்த அளவிலான அலுவலகம் மற்றும் வெளிப்புற பர்னிச்சர்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. எண் ஜி2, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் எதிரில், மதுரை – 625007 என்ற முகவரியில் புதிய ஸ்டோர் அமைந்துள்ளது. திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக இந்திய சினிமா நடிகை ஜனனி கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். கெளரவ விருந்தினர்களாக திரு. சுப.வெங்கடேசன், எம்.பி., , தலைவர், வேலம்மாள் குழும தலைவர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ராயல்ஓக் தலைவர் திரு. விஜய் சுப்ரமணியம், ராயல்ஓக் இன்கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் ஹெட் பிரான்சைஸ் திரு. கிரண் சாப்ரியா, ராயல் ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட். லிமிடெட் - நிர்வாக இயக்குனர் திரு. மதன் சுப்ரமணியம், ராயல்ஓக் இன்கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு ஹெட் பிரான்சைஸ் திரு. ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய கடையை திறந்து வ...