Posts

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

 இந்தியாவின் முன்னணி பர்னிச்சர் பிராண்டான ராயல்ஓக் (Royaloak) மதுரையில் இன்று தனது முதல் ஸ்டோரை தொடங்கியுள்ளது. ராயல்ஓக் அதன் சர்வதேச அளவிலான சோஃபாக்கள், சாப்பாடு மேசைகள், மெத்தை, படுக்கைகள், அலங்காரம் மற்றும் பரந்த அளவிலான அலுவலகம் மற்றும் வெளிப்புற பர்னிச்சர்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. எண் ஜி2, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் எதிரில், மதுரை – 625007 என்ற முகவரியில் புதிய ஸ்டோர் அமைந்துள்ளது. திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக இந்திய சினிமா நடிகை ஜனனி கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். கெளரவ விருந்தினர்களாக திரு. சுப.வெங்கடேசன், எம்.பி., , தலைவர், வேலம்மாள் குழும தலைவர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ராயல்ஓக் தலைவர் திரு. விஜய் சுப்ரமணியம், ராயல்ஓக் இன்கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் ஹெட் பிரான்சைஸ் திரு. கிரண் சாப்ரியா, ராயல் ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட். லிமிடெட் - நிர்வாக இயக்குனர் திரு. மதன் சுப்ரமணியம், ராயல்ஓக் இன்கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு ஹெட் பிரான்சைஸ் திரு. ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  புதிய கடையை திறந்து வைத்துப் ப

தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 65 வயதான கல்லீரல் புற்றுநோய் பாதிப்புள்ள நபருக்கு ரோபோ உதவியுடன் அறுவைசிகிச்சை!

 தென் தமிழ்நாட்டில்   முதன்முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 65 வயதான கல்லீரல் புற்றுநோய் பாதிப்புள்ள நபருக்கு ரோபோ உதவியுடன் அறுவைசிகிச்சை! ●         புற்றுக்கட்டியை அகற்றுவதற்கு ரோபோ உதவியுடன் செய்யப்படும் கல்லீரல் அறுவைசிகிச்சைக்கு, உலகளவில் முதன்மை வகிக்கும் டா வின்சி சர்ஜிக்கல் ரோபோவை மீனாட்சி மிஷன் மருத்துவமனை பயன்படுத்துகிறது  மதுரை / : தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக 65 வயதான முதியவருக்கு ரோபோ உதவியுடன் கல்லீரல் அறுவை சிகிச்சையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக செய்து, புற்று நோய் கட்டியை அகற்றியிருக்கிறது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, விரைவாக குணமடைந்த இந்நோயாளி வெறும் 5 நாட்களில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  இம்மருத்துவமனையின் குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறை மேற்கொண்ட பரிசோதனையில், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு பொருத்தமானவராக இந்நோயாளி இருப்பதாக கண்டறியப்பட்டது. கல்லீரல்-கணைய அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஶ்ரீனிவாசன் ராமசந்திரன்,  குடல் இரைப்பை 
 புதுவையில் சர்வதேச குறும்பட திருவிழா பாஞ்சோ இந்தியா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘லெட்ஸ் டான்ஸ்’ திரைப்படத் திருவிழா புதுச்சேரியில் மே 21ம்தேதி மாலை 7 மணிக்கு பாண்டிச்சேரி அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் அரங்கில் நடைபெற்றது. க்ளெர்மாண்ட்-ஃபெர்ராண்ட் சர்வதேச குறும்படத் திருவிழாவில் திரையிடப்பட்ட இப்படத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நடனக் காட்சிகள் ஒளிபரப்பாகின.  நடனம் குறித்த குறும்படங்கள், தனிப்பட்ட, நாடகத்தனமான, நகைச்சுவையான, உணர்வுப்பூர்வமான அல்லது அதிரடியான சில அசத்தல் விவரங்களைக் காட்சிப்படுத்தப்பட்டன. அனைத்து நடன ஸ்டைல்களும் அவற்றின் மூலங்களுடன்,  தேர்ந்தெடுக்கப்பட்ட அகலப் பரப்புக் காட்சியாக திரையிடப்பட்டன. பாஞ்சோ இந்தியாவின் ஓர் அங்கமாக விளங்கும் ‘லெட்ஸ் டான்ஸ்’, ஃப்ரான்ஸ் தூதரகம் மற்றும் அதன் கலாச்சாரச் சேவைப் பிரிவான இன்ஸ்டிடியூட் ஃப்ராங்கைஸ் என்டி, அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் நெட்வொர்க், ஃப்ரான்ஸ் நாட்டு கான்சொலேட்கள் ஆகியவற்றின் கலை, கலச்சாரம், கல்வி மற்றும் இலக்கிய முனைவாகும். குறும்படங்களுக்கான மிகப் பெரிய பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவாக க்ளெர்மாண்ட் - ஃபெர்ராண்ட் சர்வதேச குறும்படத் திருவிழா

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம் ● இப்பயிலரங்கில் மாநிலத்தின் பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலிருந்து 50க்கும் அதிகமான இதயவியல் மருத்துவர்கள் பங்கேற்பு.  ● அடைபட்டுள்ள கரோனரி தமனிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மிகக்குறைவான ஊடுருவல் செயல்முறைகளுள் ஒன்றான சருமத்து ஊடாக மேற்கொள்ளப்படும் கரோனரி இடையீட்டு சிகிச்சை (PCI) மீது நடைபெறும் மாநாட்டின் ஒரு அங்கமாக இப்பயிலரங்கு நடத்தப்பட்டது.  மதுரை, 11 ஏப்ரல் 2022*: இதய நோய்கள், வால்வு குறைபாடுகள், இதயத்தின் கட்டமைப்பு ரீதியிலான கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பு, இதயவியலின் ஒரு அங்கமான  இடையீட்டு சிகிச்சை நிபுணர்களுக்காக பயிலரங்கை ஒரு நாள் நிகழ்வாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) நடத்தியது. அடைபட்டுள்ள கரோனரி தமனிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மிகக்குறைவான ஊடுருவல் செயல்முறைகளுள் ஒன்றாக சருமத்து ஊடாக மேற்கொள்ளப்படும் கரோனரி இடையீட்டு சிகிச்சை (PCI) இருந்து வருகிறது. இந்த இடையீட்டு சிகிச்சையில

சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிக பலன்களை கொண்ட கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை வழங்கும் ஐசிஐசிஐ

 சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிக பலன்களை கொண்ட கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை வழங்கும் ஐசிஐசிஐ ந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ்  உடன் இணைந்து கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி இன்று அறிவித்துள்ளது. ’சென்னை சூப்பர் கிங்ஸ் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு என அழைக்கப்படும் இந்த கார்டு, பிரபலமான அணியின் மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்காக பிரத்யேக சலுகைகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டை, விளையாட்டு ஆர்வலர்களுக்கு தங்களுக்கு பிடித்த அணிகளுடன் இணைவதற்கும், கிரெடிட் கார்டின் பலன்களை பெறுவதற்கும் வங்கியால் வழங்கப்படும் பிரத்யேகமான கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டுகளின் மற்றொரு கூடுதல் அம்சமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஐசிஐசிஐ வங்கி இங்கிலாந்தின் தொழில்முறை கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் உடன் இணைந்து பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. இந்த கூட்டு செயல்பாடு குறித்து ஐசிஐசி வங்கியின் பாதுகாப்பில்லாத சொத்து பிரிவின் தலைவர்  சுதிப்தா ராய் கூறுகையில், "சிஎஸ்கே உடன்

ஆஞ்சியோபிளாஸ்டி நோயாளிக்கு கவர் ஸ்டென்ட் பொருத்தி மதுரை அப்போலோ மருத்துவமனை சாதனை

  மதுரை, மார்ச் 26: நவீன சிகிச்சையில் முன்னோடியாகத் திகழும் மதுரை அப்போலோ மருத்துவமனை, இருதய சிகிச்சையில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. அப்போலோ சிறப்பு மருத்துவமனை தற்போது இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான ஆஞ்சியோபிளாஸ்டி நோயாளிக்கு கவர்  ஸ்டென்ட் பொருத்தி சாதனை படைத்துள்ளது. மதுரை அப்போலோ மருத்துவமனையில், இருதயவியல் துறை டாக்டர் S.K.P.கருப்பையா அவர்களை 64 வயது மதிக்கதக்க  ஒரு இதய நோயாளி சில நாட்களுக்கு முன் ஆலோசனை பெற சந்தித்தார். அந்த நோயாளி தன் இதய நோய்க்கான முறையான ஆஞ்சியோ   பிளாஸ்டி சிகிச்சையை ஏற்கனவே வேறு மருத்துவமனையில் ஒன்பது மாதத்திற்கு முன்பு பெற்றிருந்தார். இருப்பினும் கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல அவருக்கு வலி அதிகமாகியதால் அப்போலோ மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற வந்தார். மீண்டும் அவருக்கு  ஆஞ்சியோகிராம் எடுத்து பார்த்தபோது இருதயத்திற்கு இரத்தம் செலுத்தக்கூடிய முக்கிய இரத்த நாளத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த ஸ்டென்டில் இருந்து இரத்தக் கசிவும், வீக்கமும் ஏற்பட்டிருந்தது.

மின் நுகர்வோர் சேவை மையம் அலைபேசி எண் .9498794987 -ல் பெறப்படும் புகார்களை

 மின் நுகர்வோர் சேவை மையம் அலைபேசி எண் .9498794987 -ல் பெறப்படும் புகார்களை சென்னை - மின்னகம் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களுக்கு கணினி மூலம் அனுப்பப்படுகிறது . இவ்வாறு அனுப்பப்படும் புகார்களை மின் பகிர்மான வட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்திலிருந்து சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கும் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் கொண்ட வாட்ஸ்அப் குரூப்பிற்கும் அனுப்பப்படுகிறது . பெறப்பட்ட புகார்கள் எந்த வகையானது என கள ஆய்வு செய்து உடனுக்குடன் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . பெறப்பட்ட புகார்களுக்கு தீர்வு கண்டவுடன் சம்பந்தப்பட்ட பிரிவு பொறியாளர் , வட்ட அளவில் செயல்படும் மின்னகத்திற்கு வாட்ஸ்அப் ( கட்செயலி ) வாயிலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விளக்கமாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது . இவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நுகர்வோரிடமே வட்ட அளவில் செயல்படும் மின்னகம் மூலமாக உறுதிபடுத்தப்பட்டவுடன் புகார்கள் முடித்து வைக்கப்படுகின்றன . மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட